`பூமி நகர்வால் தமிழகத்தில் கடும் குளிர் ஏற்படுமா?'- சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

`பூமி நகர்வால் தமிழகத்தில் கடும் குளிர் ஏற்படுமா?'- சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

“தமிழகத்திற்கு கடும் குளிர் தொடர்பாக எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும் கடும் குளிர் தொடர்பாக சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் கடும் குளிர் நிலவும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அதில், “சூரியனை, பூமி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்தாண்டு ஜூலை 4-ம் தேதியிலிருந்து ஆகஸ்டு 22-ம் தேதிவரை மிகத் தொலை தூரத்திற்குப் பூமி செல்கிறது. இது வழக்கத்தைவிட 66 சதவீத தூரம் அதிகமாகும். இதனால் பூமியில் கடும் குளிர் ஏற்படும். மேலும் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் உள்ளிட்டவை அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிக ஊட்டச் சத்துகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உண்மை எனப் பலரும் நம்பி இருந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சூரியனைச் சுற்றிவரும் பூமியின் நகர்வால் கடும் குளிர் நிலவும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மை இல்லை. தமிழகத்திற்கு கடும் குளிர் தொடர்பாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in