இருசக்கர வாகனம் மீது மோதிய சென்னை மேயரின் கார்: ஓடோடி சென்று உதவி செய்த பிரியா

இருசக்கர வாகனம் மீது மோதிய சென்னை மேயரின் கார்: ஓடோடி சென்று உதவி செய்த பிரியா

மேயர் கார் மோதி தாயுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுவன் லேசான காயம் ஏற்பட்டது. தவறுக்கு வருந்தி ஆறுதல் தெரிவித்த மேயர், மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தார்.

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காரில் சென்று கொண்டிருந்தார். வேம்புலி அம்மன் கோயில் சாலை சந்திப்பில் கார் சென்ற போது அவ்வழியாக பெண் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மேயர் கார் மோதியது. இதில் இரண்டு பள்ளி சிறுவர்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுவன் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து கீழே விழுந்தவர்களை தூக்கினர். உடனே மேயர் பிரியா காரில் இருந்து இறங்கி வந்து தாய், அவரது குழந்தைகளிடம் தவறுக்கு வருந்தி ஆறுதல் தெரிவித்ததுடன் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in