தாம்பரத்தில் நின்று சென்றது தேஜஸ் ரயில்: டி.ஆர்.பாலு, எல்.முருகன் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்தாம்பரத்தில் நின்று சென்றது தேஜஸ் ரயில்

ரயில் பயணிகளின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏற்று சென்னையில் இருந்து இன்று காலை மதுரைக்கு புறப்பட்ட  தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

சென்னையில் இருந்து மதுரைக்கு அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த ரயில், பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காலை டீ, காபி, படிப்பதற்கு தமிழ், ஆங்கில செய்தி தாள்கள், சிற்றுண்டி போன்றவை வழங்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணிநேரத்தில் செல்லும் இந்த தேஜஸ் ரயில் திருச்சி ஜங்சனில் மட்டுமே நின்று செல்லும் நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். மதுரை எம்.பியான சு.வெங்கடேசன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் இது குறித்து ரயில்வே துறையிடம் கோரிக்கையை அளித்திருந்தனர்.

இந்த நிலையில் அனைவரின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று சென்றது.  தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,  மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர்  ரயிலை வரவேற்று, பயணிகள் ஏறியதும் அங்கிருந்து கொடி அசைத்து ரயிலை அனுப்பி வைத்தனர். தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்வதால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in