சென்னையில் வீட்டில் பதுக்கி விற்பனை; இருவர் கைது: 1.150 கிலோ கஞ்சா பறிமுதல்

கைது செய்யப்பட்ட பிரபாகரன், சந்தோஷ்
கைது செய்யப்பட்ட பிரபாகரன், சந்தோஷ்சென்னையில் வீட்டில் பதுக்கி விற்பனை; இருவர் கைது: 1.150 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை கேகேநகர் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

சென்னை கேகே கர், விஜயராகபுரம் பகுதியில் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை போலீஸார் தொடர்ச்சியாக சாதாரண உடையில் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது அந்த பகுதி இளைஞர்கள் அந்த வீட்டினுள் சென்று வருவதை கண்காணித்து அவர்களிடம் விசாரித்தபோது கஞ்சா விற்பனை செய்து வருவதை உறுதி செய்தனர்.

நேரடியாக போலீஸார் அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது போலீஸாரை கண்ட இருவரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீஸார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், சந்தோஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in