சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜக பிரமுகர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிப்பு!

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜக பிரமுகர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  இன்ஸ்பெக்டர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள்  என போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வெங்கட்ராமன்  உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 21 பேர் கடந்த நவம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட நான்கு பேர் தலைமறைவானார்கள். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சிறுமியின் உறவினர் ஷகிதா, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 21 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவர்களுக்கான தண்டனை வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in