பொதுக்கழிப்பிட பராமரிப்பு: தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்பிட பராமரிப்பு பணியைத் தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் தூய்மை பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியில், பல்வேறு பொது இடங்களில் 800-க்கும் மேற்பட்ட இலவச பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மக்கள் அதிகம் கூடக்கூடிய சுற்றுதளங்கள் மட்டுமின்றி பேருந்து நிலையம், சந்தை பகுதி, போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என மக்கள் அதிகம் கூடும் வாய்ப்புள்ள பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் நிதியில் 420 கோடிக்கு புதிதாக கழிப்பிடங்கள் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத நகரமாக சென்னையை அறிவிக்க மாநகராட்சி பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது

இதனையடுத்து மக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான பொது கழிப்பிட வசதியை உறுதி செய்ய, புதிதாக கட்டப்படும் கழிப்பிடம் மற்றும் ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்கும் புதிய திட்டத்தை வரும் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அண்மைகாலமாக சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதற்கு சிஐடியு போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பொதுக்கழிப்பிட பராமரிப்பையும் தனியாருக்கு வழங்கினால் ஏற்கெனவே உள்ள பணியாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in