மத்திய அரசின் சிறந்த கல்லூரிகள் பட்டியல் வெளியீடு: 3, 7-வது இடங்களை பிடித்தது சென்னை கல்லூரிகள்!

மாநில கல்லூரி
மாநில கல்லூரிமத்திய அரசின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களைத் தட்டி சென்ற சென்னை கல்லூரிகள்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 3 -வது இடத்தை சென்னை மாநில கல்லூரியும், 7-வது இடத்தை லயோலா கல்லூரியும் பிடித்துள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

2023-ம் ஆண்டிற்கான சிறந்த கல்லூரிகளின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதனை அடுத்து பெங்களூரு ஐ.ஐ.எஸ். 2-வது இடமும், டெல்லி ஐ.ஐ.டி. 3-வது இடமும் பிடித்து உள்ளன.

நாட்டிலேயே சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி என்ற பெருமையுடன், அதிலும் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. இந்த சிறந்த என்ஜினீயரிங் கல்லூரி பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. 9-வது இடம் பிடித்து உள்ளது.

இதேபோன்று, நாட்டிலேயே சிறந்த கலைக் கல்லூரிக்கான பெருமையை டெல்லி பல்கலைக் கழகத்தின் மிரண்டா ஹவுஸ் கல்லூரி பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை பிரசிடென்சி கல்லூரி 3-வது இடம் பிடித்து உள்ளது.

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4-வது இடமும், சென்னை லயோலா கல்லூரிக்கு 7-வது இடமும் கிடைத்து உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 38 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in