தீர்க்கப்படாத 8,912 குடிபோதை வழக்குகள்; அடுத்து இதுதான் நடக்கும்: எச்சரிக்கும் போலீஸ்

தீர்க்கப்படாத 8,912 குடிபோதை வழக்குகள்; அடுத்து இதுதான் நடக்கும்: எச்சரிக்கும் போலீஸ்

சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் அபராத தொகை 10,000 ரூபாய் விதிக்கப்படுகிறது . இது அதிகமாக இருப்பதால் பலர் அபராத தொகையை செலுத்துவதில்லை. இதனால் சென்னையில் மட்டும் 8912 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. 

வழக்குகளை தீர்த்து வைக்க சென்னையில் பத்து இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வழக்குகள் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 194 பேர் ஆஜராகி நிலுவைத் தொகையை செலுத்தி வழக்கை முடித்துக் கொண்டனர். மேலும் இணையதளம் வாயிலாக வங்கிக்கணக்கு வாயிலாகவும் அபராத தொகையை 425 நபர்கள் செலுத்தி தங்களது வழக்குகளை முடித்துக் கொண்டுள்ளனர். 425 நபர்களிடமிருந்து 43,98,500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டும் இன்றி வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும் அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது போன்ற குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 2563 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in