அரக்கோணம், அச்சரப்பாக்கம் வரை விரிவடைகிறது சென்னை மாநகரம்!

அரக்கோணம், அச்சரப்பாக்கம் வரை விரிவடைகிறது சென்னை மாநகரம்!

சென்னை மாநகரை அரக்கோணம், அச்சரப்பாக்கம் வரை விரிவுப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தேனாம்பேட்டையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சென்னை முழுமை திட்டம் 2-ன்படி அரக்கோணம், அச்சரப்பாக்கம் வரை சென்னை மாநகரம் எல்லையை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

2027-ம் ஆண்டு முதல் 2046-ம் ஆண்டு வரையிலான சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எல்லை விரிவுப்படுத்தப்பட உள்ளது. மாநகர வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தற்போது 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in