அதிகாலையில் பற்றி எரிந்த ஏசி; தூக்கத்திலேயே பறிபோன தொழிலதிபரின் உயிர்: சென்னையில் சோகம்

அதிகாலையில் பற்றி எரிந்த ஏசி; தூக்கத்திலேயே பறிபோன தொழிலதிபரின் உயிர்: சென்னையில் சோகம்

சென்னையில் வீட்டில் இருந்த ஏசியில் ஏற்பட்ட தீ விபத்தில் தூக்கத்திலேயே தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தொழிலதிபரான இவர் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுரேஷ்குமார் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டின் மேல் மாடியில் இருந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தீயில் கருகி சுரேஷ்குமார் சடலமாக கிடந்துள்ளார்.

இதை குறித்து காவல்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். சுரேஷ்குமாரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வீட்டில் சுரேஷ்குமார் மட்டும் இருந்திருக்கிறார். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுரேஷ்குமாரை தவிர்த்து வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிரசவத்திற்காக மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கணவர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in