சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு... உள்நாட்டு முனையம் இரண்டாக பிரிப்பு!

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக இட வசதி கிடைத்துள்ளதுடன் மேலும் பல விமானங்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை, 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில் 2 கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் முடிவு செய்தது. இதன் முதல்கட்ட பணிகளை, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

டெர்மினல் 3, 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டுவிட்டதால், இவைகளை இடிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில், விமான நிலைய 2ம் கட்ட கட்டுமான பணிகள் நடக்க போவதாக சொல்கிறார்கள்.

ஆனால், பழைய சர்வதேச முனையத்தின் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருப்பதால், அவைகளை இடிக்கவில்லை. அதற்கு பதிலாக, கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. 

அதன்படி, சர்வதேச முனையமாக இருந்த, டெர்மினல் 4ஐ,   உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணிகள்  நடந்து முடிந்தது.  இதையடுத்து  நாளை மறுநாள் நவம்பர் 15ம் தேதி இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நாளை 14-ம் தேதி, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4-ல் சோதனை அடிப்படையில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவை நடைபெற உள்ளன.  கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்  என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  பணிகள் முழுமையாக முடிவடையாததால் அது நடக்கவில்லை. தற்போது மொத்த பணிகளும் முடிந்த நிலையில், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in