பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து பலியான 2-ம் வகுப்பு மாணவி: 8 பேரும் விடுதலை

செங்கல்பட்டு நீதிமன்றம்
செங்கல்பட்டு நீதிமன்றம்பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து பலியான 2-ம் வகுப்பு மாணவி: 8 பேரும் விடுதலை

பள்ளி பேருந்து இருக்கைக்கு அடியில் இருந்த ஓட்டையின் வழியே கீழே விழுந்தில் பஸ் சக்கரம் ஏறி 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக் கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள். தினமும் பள்ளி பேருந்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு பேருந்தில் ஸ்ருதி வீடு திரும்பி கொண்டு இருந்தார். இந்த நிலையில், கடந்த 2012 ஜூலை 25-ம் தேதி மாணவி ஸ்ருதி பேருந்து இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பள்ளிக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன.

இதுதொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், பள்ளி தாளாளர் விஜயன், அவர்களது சகோதரர்களான ரவி, பால்ராஜ், பேருந்து ஓட்டுநர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்து ஓட்டுநர் யோகேஷ் சில்வேரா மற்றும் கிளீனரான 17-வயது சிறுவன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். 

இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் 35 சாட்சிகளும், பள்ளி தரப்பில் 8 சாட்சிகளும் விசாரணை நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in