ஓட ஓட துரத்தி போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: போதை ஆசாமி வெறிச்செயல்

ஓட ஓட துரத்தி போலீஸ்காரருக்கு கத்திக்குத்து: போதை ஆசாமி வெறிச்செயல்

பொதுமக்கள் மத்தியில் போலீஸ்காரரை குடிபோதையில் இருந்த ஒருவர் கத்தியால் துரத்தி துரத்தி குத்திய சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கண்டிவலி பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகும். இப்பகுதியில் ஒருவர் பொதுமக்களைப் பற்றி கவலைப்படாமல் திறந்த வெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் ஒதுக்கிச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த கண்டிவலி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் உதய் கதம் என்பவர், அந்த நபரைக் கண்டித்துள்ளார். இதனால் அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் உதய் கதத்தை துரத்தி துரத்திக் குத்தினார். இதனால், அவர் படுகாயமடைந்தார். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் கண்டிவலி பகுதியைச் சேர்ந்த ராம்கோண்டா என்பது தெரிய வந்தது. அத்துடன் அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். காயமடைந்த போலீஸ்காரர் உதய் கதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ்காரர் ஒருவர் பரபரப்பான சாலையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in