விளையாட்டு வினையானது; சிறுவனின் தலையில் சிக்கிக் கொண்ட பாத்திரம்: ஒரு மணி நேரமாக போராடிய தீயணைப்புத்துறை!

விளையாட்டு வினையானது; சிறுவனின் தலையில் சிக்கிக் கொண்ட பாத்திரம்: ஒரு மணி நேரமாக போராடிய தீயணைப்புத்துறை!

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனின் தலையில் பாத்திரம் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குதிரைவட்டத்தைச் சேர்ந்தவர் சஜீவ்குமார். இவரது 2 வயது மகன் அமர்நாத். இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தலையில் பாத்திரம் சிக்கிக் கொண்டது. அதை கழட்டி எடுக்க முடியாமல் அவனது பெற்றோர் தவித்தனர்.

இதுகுறித்து கோழிக்கோடு தீயணைப்புத்துறையினருக்கு சஜீவ்குமார் தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி பாத்திரத்தை வெட்டி எடுத்து சிறுவனை மீட்டனர். இந்த சம்பவம் அபபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in