தமிழகம் வழியாகச் செல்லும் மைசூர்- கொச்சுவேலி ரயில் சேவையில் மாற்றம்!

ரயில்
ரயில்hindu கோப்பு படம்

கேரள மாநிலம், கொச்சுவேலி ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணியின் காரணமாக தமிழகம் வழியாகச் செல்லும் கொச்சுவேலி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மைசூர்- கொச்சுவேலி இடையே வண்டி எண் 16315 என்ற ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது மைசூர், பெங்களூரு, பங்காருபேட்டை வழியாக தமிழகத்திற்கு வரும். இங்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு வழியாக எர்ணாக்குளம், ஆழப்புழா, காயன்குளம், கொல்லம் சென்று கொச்சுவேலிவரை செல்லும்.

கொச்சுவேலி திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் வைத்து அனைத்து ரயில்களையும் நிறுத்திவைத்து பராமரிப்பது கடினம் என்பதால் கொச்சுவேலி ரயில் நிலையம் சிறந்த உள்கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது கொச்சுவேலி ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. அதன் காரணமாக அடுத்த மூன்று நாள்களுக்கு, 10 ஆம் தேதி வரை மைசூர்- கொச்சுவேலி ரயில் எர்ணாக்குளம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதனால் இந்த ரயில் ஆழப்புழா, காயன்குளம், கொல்லம், கொச்சுவேலிக்கு செல்லாது. மறுமார்க்கத்திலும் எர்ணாக்குளத்தில் இருந்தே இயக்கப்படும் என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in