
வடக்கு பசிபிக் கடல் பகுதியில் நேற்று விழுந்த ராக்கெட் பாகங்கள் சந்திரயான் - 3 திட்டத்தினுடையதுதான் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்யும், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட் கடந்த ஜூலை 14ம் தேதி பெங்களூருவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டிலிருந்து திட்டமிட்டபடி விண்கலங்கள் சரியாக பிரிந்து கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இந்நிலையில், சந்திரயான் - 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட 124 நாள்களுக்கு பின்பு செயலிழந்த ராக்கெட்டின் ஒருங்கிணைந்த சில பாகங்கள், புவியின் வளிமண்டல பகுதியில் கட்டுப்பாடின்றி நுழைந்தன. அவை நேற்று மதியம் 2.40 மணி அளவில் வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்தன. இந்த தகவலை உறுதி செய்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), சர்வதேச விண்வெளி அமைப்பின் வழிகாட்டுதலின்படி ராக்கெட் அமைப்பு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!
HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!
இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!
அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!
அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!