சண்டிகர் தாபாவில் டீசல் பரோட்டா தயாரிக்கப்பட்டதா? வைரலாகும் வீடியோ

டீசல் பரோட்டா தயாரிக்கப்பட்டதாக வீடியோ வைரல்
டீசல் பரோட்டா தயாரிக்கப்பட்டதாக வீடியோ வைரல்

சண்டிகரில் தாபா ஒன்றில் டீசல் பரோட்ட தயாரிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானது. ஆனால், தாபா உரிமையாளர் அதனை மறுத்துள்ளார்.

உணவு வகைகளை சமூக வலைதளத்தில் பதிவிடும் பிளாக்கர் அமன்பிரீத் சிங் என்பவர் சமீபத்தில் தனது பிளாக்கில் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதுடன் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

அந்த வீடியோவில், சண்டிகரில் (பஞ்சாப் - ஹரியாணா பொது தலைநகரம்) உள்ள ஒரு தாபாவில் (சாலையோர உணவகம்) டீசலில் சமைக்கப்பட்ட பரோட்டக்களை வழங்குவதாக கூறியிருந்தார் சிங். இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்த கவலைகளையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அதற்கேற்ப அந்த வீடியோவில் உணவு தயாரிப்பவர் டின்னிலிருந்து கரும் நிறத்தில் ஆயிலை ஊற்றுவதும், உடனடியாக பரோட்டா எண்ணெயில் பொரிந்து கருகுவதுமாக உள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த தாபாவின் உரிமையாளர் சன்னி சிங் இதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் டீசல் பரோட்டா போன்ற எதையும் தயாரிக்கவுமில்லை... வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுமில்லை. ஒரு வலைப்பதிவர் அந்த வீடியோவை வேடிக்கைக்காக செய்திருந்தார். டீசலில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை யாரும் சாப்பிட மாட்டார்கள். அவ்வாறு சமைக்கவும் மாட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

டீசல் பரோட்டா வீடியோ வைரலாகி வருவது எனக்கு நேற்று தான் தெரிந்தது. சம்பந்தப்பட்ட பதிவர் அதை நீக்கிவிட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். நாங்கள் சமையல் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறோம். இங்குள்ள மக்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்குகிறோம். நாங்கள் மக்களின் உயிரோடு விளையாடவில்லை" என தெரிவித்தார்.

இந்நிலையில் டீசல் பரோட்டா வீடியோ, அதை மறுக்கும் தாபா உரிமையாளரின் வீடியோ ஆகிய இரண்டுமே தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in