மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்: குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்: குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் நாளையும், நாளை மறுதினமும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “கன்னியாகுமரி கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் (மார்ச் 4 மற்றும் மார்ச் 5 ) மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. அதனால் அப்பகுதி மீனவர்கள் அந்த இருநாள்களும் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே தொழிலுக்குச் சென்று இப்பகுதிகளில் கடலில் இருப்போரும் கரை திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் நாளை(சனிக் கிழமை) ஓரு சில இடங்களில் லேசான தூறல் முதல் மிதமான மழைவரை பெய்யக் கூடும் ”எனக் கூறப்பட்டுள்ளது. குமரி மீனவர்கள் ஏற்கெனவே கடந்த இரு தினங்களாக அவ்வபோது கடலில் சூறைக்காற்று வீசுவதாக தொழிலுக்குச் செல்லாமல் கரை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in