உஷார்... அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை!

மழை
மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிதமான மழையும், ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வானிலை அறிவிப்பு
வானிலை அறிவிப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று இரவு முதலே பரவாலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in