இன்று முதல் மூன்று நாட்களுக்கு குடை எடுத்துட்டுப் போங்க: வானிலை மையம் மழை அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 18-ம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் வானம் வேகமூட்டத்துடன் காணப்படும்.

இன்று ஆந்திரா, மத்திய மேற்கு வங்கிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்றுவீசும். இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும். இதேபோல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் காற்று அதிகளவில் வீசும் ”என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in