மிகக்கனமழை பெய்ய உள்ளதால் 8 மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருங்க: வானிலை மையம் எச்சரிக்கை

மிகக்கனமழை பெய்ய உள்ளதால் 8  மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருங்க: வானிலை மையம் எச்சரிக்கை

ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: வட தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in