தமிழகம், கேரளாவில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் மழை

தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

வங்க கடலில் காற்று சுழற்சி காரணமாக வடக்கு கேரளா, தெற்கு ஆந்திர, கடலோர பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

குறிப்பாக, வரும் 29ம் தேதி கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in