நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் உறைபனி: வானிலை ஆய்வுமையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் உறைபனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமையம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். அதிகாலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் உறைபனிக்கு வாய்ப்பு உண்டு. இதேபோல் 17-ம் தேதிமுதல் 19-ம் தேதிவரை தமிழகத்தில் வறண்ட வானிலை மட்டுமே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இருநாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். சென்னையிலும் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும்.”எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in