அல்ப ஆயுசில் போயிட்டியே!... 125 வயதில் உயிரிழந்த ஆமைக்காக வருந்தும் உயிரின ஆர்வலர்கள்

அல்ப ஆயுசில் போயிட்டியே!... 125 வயதில் உயிரிழந்த ஆமைக்காக வருந்தும் உயிரின ஆர்வலர்கள்
Updated on
2 min read

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 125 வயது கலப்பாகஸ் வகை ஆமை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் மிக நீண்ட காலம் வாழும் உயிரினங்களில் முதன்மையானது ஆமைகள். சுமார் 200 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரையிலும் இந்த உயிரினங்கள் வாழக்கூடியவையாகும். அந்த வகையில் கலப்பாகஸ் வகை ஆமைகள் சராசரியாக 175 முதல் 225 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை. அத்தகைய ஒரு ஆமை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் வயது 125 என வன உயிரின மருத்துவர்கள் கணித்திருந்தனர்.

அந்த ஆமைக்கு பூங்கா அதிகாரிகள் சாணக்யா என பெயர் சூட்டி இருந்தனர். இந்த ஆமை சக்கரவள்ளி கிழங்குகளை விரும்பி உண்ணக்கூடியதாகும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாணக்கியா ஆமை உணவு உட்கொள்வதை நிறுத்தி இருந்தது. இதனால் அந்த ஆமையை கால்நடை மருத்துவர்கள் குழுவினர் மற்றும் பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சுமார் 10 நாட்களுக்கும் மேலாக, எப்போதும் விரும்பி சாப்பிடும் சக்கரவல்லி கிழங்குகள் மற்றும் கீரைகளை அந்த ஆமை உட்கொள்ளவில்லை.

ஹைராபாத் நேரு உயிரியல் பூங்கா
ஹைராபாத் நேரு உயிரியல் பூங்கா

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில் சாணக்யா ஆமை உறக்கத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் மற்றும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த ஆமைக்கு பிரேத பரிசோதனை நிகழ்த்தப்பட்டதில், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்ததால் அந்த ஆமை உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. வழக்கமாக 200 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய இந்த ஆமை வகை தனது 125 வது வயதிலேயே உயிரிழந்திருப்பது, வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!

'கடவுளே மன்னிச்சுடு... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!

பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in