கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி: இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது மத்திய அரசு!

கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி: இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது மத்திய அரசு!

கருப்பை வாய் புற்றுநோய்க்கு இந்தியாவில் முதல்முறையாகத் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் 15 முதல் 44 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கருப்பை வாய்ப் புற்று நோய் உள்ளது. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் முதல்முறையாக உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. கருப்பை வாய்ப் புற்று நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் ‘செர்வாவேக்’ தடுப்பூசியை சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இது, கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணியான ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமிக்கு எதிராகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் சந்தைப்படுத்துதலுக்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டி இந்தியத் தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சீரம் இந்தியா நிறுவனத்திற்கு அண்மையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் இன்று கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in