‘பாஜக தொண்டர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கவே அக்னிபத் திட்டம்’ - மம்தா பானர்ஜி காட்டம்

‘பாஜக தொண்டர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கவே அக்னிபத் திட்டம்’ - மம்தா பானர்ஜி காட்டம்

அக்னிபத் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மேற்கு வங்க அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தனக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறியிருக்கும் மம்தா பானர்ஜி, இது பாஜக தொண்டர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கும் திட்டம் என விமர்சித்திருக்கிறார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடந்த ++ கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “மத்திய அரசிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அக்னிவீரர்கள் நான்கு ஆண்டுகள் வேலை செய்த பின்னர், மாநில அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். பாஜக தொண்டர்களுக்கு நான் பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

மேலும், “இதைப் பற்றியெல்லாம் ஊடகங்களுக்குத் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பிய மம்தா, “நாங்கள் ஏன் நீங்கள் (மத்திய அரசு) செய்யும் பாவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்? வேலை தேடும் இளைஞர்கள் ஏராளமானோர் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்போம்” என்றார். “முன்னாள் ராணுவ வீரர்கள் என்று நாம் யாரை அழைக்கிறோம்? வாழ்நாள் முழுவதும் ராணுவத்தில் சேவையாற்றிவிட்டு வருபவர்களைத்தானே?” என்றும் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, திங்கள்கிழமை கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா, அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், நான்கு ஆண்டுகள் பணிசெய்த பின்னர் அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in