சர்வதேச போதைப்பொருள் கும்பலின் "பெரிய மீன்களை" மத்திய அரசு கைது செய்யவில்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்சர்வதேச போதைப்பொருள் கும்பலின் "பெரிய மீன்களை" மத்திய அரசு கைது செய்யவில்லை

சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த பெரிய மீன்களை மத்திய அரசும், புலனாய்வு அமைப்புகளும் கைது செய்யாமல், சிறு மீன்களை பிடிப்பதாகவும் என்றும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சபீரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அவரது வயல்களில் இருந்து அபின் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், சபீர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பெரிய மீன்களை இந்திய அரசும், புலனாய்வு அமைப்புகளும் கைது செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சர்வதேச போதைப்பொருள் கும்பல்களின் பின்னால் ஏன் செல்லக்கூடாது? அவற்றைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள். விவசாயம் செய்பவர்கள், பஸ் ஸ்டாண்ட் அல்லது பிற இடங்களில் நிற்கும் ஒருவர் என நீங்கள் சிறு மீன்களை மட்டும் பிடிக்கிறீர்கள்" என தெரிவித்தனர்.

மத்திய பிரதேச அரசு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜி, சபீரின் ஜாமீன் மனுவை எதிர்த்தார், இது ஒரு சிறிய அளவு அல்ல, ஏற்கனவே இரண்டு முறை அவர் குற்றவாளி என்று அவர் கூறினார். ஆனால், மீட்கப்பட்ட சைக்கோட்ரோபிக் பொருளின் அளவுக்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள் என்றும், குற்றத்திற்காக அவர் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாநில அரசு மற்றும் என்சிபியின் கோரிக்கையை நிராகரித்து, உச்ச நீதிமன்றம் சபீருக்கு ஜாமீன் வழங்கியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in