தொலைத்தொடர்பு துறையின் பெயரில் போலி அழைப்புகள்... மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

போலி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை
போலி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

தொலைத் தொடர்பு துறையிலிருந்து பேசுவதாக ஆள்மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைத் தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொலை தொடர்பு துறை பெயரில் போலி அழைப்புகள்
தொலை தொடர்பு துறை பெயரில் போலி அழைப்புகள்

92 போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகள், அரசாங்க அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைத் தொடர்புத் துறையின் பெயரில் வரும் அழைப்புகளில் மொபைல் எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது மொபைல் எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அச்சுறுத்தும் அழைப்புகள் பொதுமக்களுக்கு வருகின்றன. சைபர் குற்றவாளிகள், இத்தகைய அழைப்புகள் மூலம், சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய தனிப்பட்ட தகவல்களை திருடவும் பொதுமக்களை அச்சுறுத்தவும் முயற்சிக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், தொலை தொடர்பு துறை
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், தொலை தொடர்பு துறை

தொலைத்தொடர்பு துறை சார்பில் இதுபோன்ற அழைப்புகளைச் செய்ய யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், அத்தகைய அழைப்புகளில் பேசுபவர்களிடம் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இதுபோன்ற அழைப்புகள் மற்றும் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளை சஞ்சார் சாதி (Sanchar Saathi) வலைதளத்தில் 'உங்கள் மொபைல் இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்' என்ற வசதியின் கீழ் சரிபார்க்கலாம். மேலும் தாங்கள் எடுக்காத அல்லது தேவையில்லாத மொபைல் இணைப்பைப் பற்றி புகாரளிக்கலாம்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in