பாதுகாப்புபடை வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சி: வடமாநில தொழிலாளி மீது குண்டு பாய்ந்தது

காயமடைந்த இஞ்சால் அலாம்
காயமடைந்த இஞ்சால் அலாம்

மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போது குடியிருப்பு பகுதியில் இருந்த வட மாநிலத் தொழிலாளி மீது குண்டு பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் ராணுவ பயிற்சி பயிற்சி மையத்தில் மத்திய பாதுகாப்பு படை போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 5.62 ரைபிள் குண்டு பல்லாவரம் பகுதியில் வீட்டின் மேற்பகுதியில் நின்றிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இஞ்சால் அலாம் (26) என்ற இளைஞரின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவனக்குறைவாக இருந்த மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in