மத்திய அரசு பணி... 677 காலிப்பணியிடங்கள்; மிஸ் பண்ணாமல் இன்றே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு பணி... 677 காலிப்பணியிடங்கள்; மிஸ் பண்ணாமல் இன்றே விண்ணப்பியுங்கள்

Published on

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 677 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

உளவுத்துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 315 பணியிடங்களும், செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 362 பணியிடங்களும் என மொத்தம் 677 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த இரு பணியிடங்களுக்குமே 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செக்யூரிட்டி / அஸ்சிஸ்டண்ட் டிரான்ஸ்போர்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எல்.எம்.வி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

மோட்டோர் மெக்கானிசம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்சி ஆகும். விண்ணப்பிக்கும் மாநிலத்தில் குடியிருப்பதற்கான சான்று அவசியம்

செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் பணிக்கு 18 வயது நிரம்பியவர்களும் 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 21,700 - 69,100 வரை சம்பளமாக வழங்கப்படும். மல்டி டாஸ்கிங் பணிக்கு ரூ. 18,000 - 56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க:

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 14.10.2023 முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்குகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 13.11.2023 ஆகும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர், ஓபிசி பிரிவினர் ஆகியோர் 500 செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு பற்றிய அறிவிப்பு உள்துறை அமைச்சக இணையதளத்தில் வரும் 14ம் தேதிக்குள் வெளியாகும்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in