`இதனை செய்யக்கூடாது; மீறினால் தண்டனை'- எஃப்எம் ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

`இதனை செய்யக்கூடாது; மீறினால் தண்டனை'- எஃப்எம் ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான பாடல்கள், கருத்துக்களை ஒலிபரப்பக் கூடாது என்றும் விதிமுறைகளை மீறி நடக்கும் ரேடியோ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக குஜராத், மும்பை உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டுகின்றன. அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல்வர் சிறார்கள் வரை போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் குற்றச்சம்பங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த பழக்கதை தூண்டுவதில் திரைப்படம், பொழுதுபோக்கு சார்ந்த ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எஃப்எம் ரேடியோ சேனல்களுக்கு புதிய வழிகாட்டுதலை பிறப்பித்துள்ளது. அதில், அனைத்து ரேடியோ சேனல்களும் இனி மது, போதைப்பொருள், ஆயுத கலாச்சாரம் ஆகியவற்றை பெருமைப்படுத்தும் விதமான பாடல்களையோ, இசைகளையோ அல்லது இவற்றை போற்றும் விதமான எந்த உள்ளடக்கங்களையும் ஒலிபரப்பக்கூடாது. மீறி ஒலிபரப்பினால், கோபா (GOPA) ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்கு ஆளாகி அந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in