வாகனத்தில் மத்திய அரசு முத்திரை; போலி ஐடி கார்டு: சென்னையில் கெத்துக்காட்டிய வாலிபர் சிக்கினார்

வாகனத்தில் மத்திய அரசு முத்திரை
வாகனத்தில் மத்திய அரசு முத்திரை வாகனத்தில் மத்திய அரசு முத்திரை; போலி ஐடி கார்டு: சென்னையில் கெத்துக்காட்டிய வாலிபர் சிக்கினார்

சென்னையில் மத்திய அரசு வாகனம் போன்று போலி பலகை வைத்து காரில் வலம் வந்த டிப்டாப் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாசாலை காதி கிராப்ட் அருகே கடந்த 15-ம் தேதி போக்குவரத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நோ பார்க்கிங்கில் நின்றிருந்த கார் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்தபோது, அந்த காரில் மத்திய அரசு வாகனம் போல (க்ரைம் இன்பர்மேஷன் ஆபீசர்) முன்பக்கத்தில் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளரான கோவிலம்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்த ஜான்பீட்டர்(29) என்பவரை நேற்று முன்தினம் வரவழைத்து போலீஸார் கார் ஆவணங்களை கேட்டுள்ளனர்.

ஆவணங்களை கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்ற கார் உரிமையாளர் ஜான் பீட்டர் நேற்று காவல் நிலையத்திற்கு வந்து ஆவணங்கள் ஏதும் இல்லை என தெரிவித்ததை அடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அரசு வாகனம் போல போலியான பலகையை வைத்து வலம் வந்தது தெரியவந்தது. மேலும் ஏரியாவில் கெத்துக்காட்டுவதற்காக அரசு வாகனம் போல பலகை வைத்தும், போலியான ஐடி கார்டை பயன்படுத்தி ஏமாற்றி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜான்பீட்டர்(29) மீது மோசடி, அரசு முத்திரையை போலியாக பயன்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து போலி ஐடி கார்டு, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தனியார் பயன்படுத்தும் வாகனங்களில் எந்த விதமான பெயர் பலகை வைக்க வைக்ககூடாது என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் ஒரு சிலர் இதுபோன்று மத்திய, மாநில அரசு அதிகாரிகள் போன்று போலி பெயர் பலகை வைத்து வலம் வருவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற மோசடிக்காரர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in