குட் நியூஸ்... இனி குறைந்தபட்ச ஊதியம் இல்லை... 2025க்குள் வாழ்நாள் ஊதியத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு!

இந்திய தொழிலாளர்கள்
இந்திய தொழிலாளர்கள்

இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.,வை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தற்போது தொழிலாளர்கள் வாங்கி வரும் குறைந்தபட்ச ஊதியம் என்பதற்கு மாற்றாக வாழ்நாள் ஊதியம் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு

தற்போது தேசிய சராசரியாக தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ.176 உள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால், இது பன்மடங்கு அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊதியங்கள் குறித்த குறியீடு நடைமுறைப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய ஊதிய திட்டமாக இருக்க வேண்டும் என ஐ.எல்.ஓ., இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய தொழிலாளர்கள்
இந்திய தொழிலாளர்கள்

இதன் காரணமாக 2025ம் ஆண்டு துவக்கத்தில் இதனை அமல்படுத்தி, 2030ம் ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுடன், 90% பேர் அமைப்பு சாரா துறையில் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்த குறைந்தபட்ச ஊதிய அளவு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் வறுமை நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in