சீனாவின் 54 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை?

சீனாவின் 54 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை?

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் 54 மொபைல் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 29-ம் தேதி டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் மேலும் பல சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பியூட்டி கேமரா, ஸ்வீட் கேமரா ஹெச்டி, புயூட்டி மேகரா செல்பி, பேஸ் பூஸ்டர், ஆப் லாக்கர், டுயல் ஸ்பேஸ் லைட் உள்பட மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மேலும் 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 54 சீன செயலிகளுக்கும் தடை விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செயலிகளை தடை செய்யும் இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in