சிறார்களுக்கு வந்துவிட்டது கோர்பேவேக்ஸ் தடுப்பூசி!

12-18 வயதினருக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி!
சிறார்களுக்கு வந்துவிட்டது கோர்பேவேக்ஸ் தடுப்பூசி!

12 வயது முதல் 18 வயதினருக்கான கோர்பவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை உள்நாட்டு தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியின் மாதிரிகளை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், அதில் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல முடிவு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பூசியை 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு 2-ம் கட்ட மருத்துவமனை பரிசோதனை நடத்துவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

‘அந்தப் பரிசோதனையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்லது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் நடப்பு கரோனா சூழ்நிலை, பரவலான தடுப்பூசி பயன்பாட்டை கருத்தில்கொண்டு, 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று பயாலாஜிக்கல் ஈ நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில், கோர்பவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in