`பழைய செல்போனை வாங்காதீங்க; வாங்கினால்..!- அலர்ட் செய்யும் குமரி எஸ்பி

`பழைய செல்போனை வாங்காதீங்க; வாங்கினால்..!- அலர்ட் செய்யும் குமரி எஸ்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை தொலைந்தவர்களிடம் இன்று மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் ஒப்படைத்தார்.

குமரிமாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் செல்போன் தொலைந்து போனது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் வந்திருந்தது. இவற்றின் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் சைபர் க்ரைம் போலீஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன் தொடர் நடவடிக்கையாக 300 செல்போன்கள் மீட்கப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு 42 லட்சம் ரூபாய் ஆகும்.

செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். தொடர்ந்து எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குமரியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 622 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 87 லட்சம் ஆகும். இதேபோல் குமரியில் செல்போன்களை குறிவைத்துத் திருடும் மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் மீட்கப்பட்டன. பொதுமக்கள் தெரியாத நபர்களிடம் இருந்து பழைய செல்போனை விலைக்கு வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். அது குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட செல்போனாகவும் இருக்கலாம். பொதுமக்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அருகாமை காவல் நிலையத்திலோ அல்லது காவல்துறை இணையதளத்திலோ புகார் அளிக்கலாம்”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in