மீண்டும் வன்முறைக்கு வாய்ப்பு... மணிப்பூரில் அக்.11ம் தேதி வரை செல்போன் இணைய சேவை முடக்கம்!

இணைய சேவை முடக்கம்
இணைய சேவை முடக்கம்

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெறுப்பை பரப்புவதைத் தடுக்க அக்.11-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் செல்போன் இணையதள சேவையை அரசு முடக்கியுள்ளது.

மணிப்பூர் வன்முறை
மணிப்பூர் வன்முறை

மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள், பாதுகாப்புப் படையினருடன் பொதுமக்கள் மோதல் மற்றும் காவல் நிலையங்கள் முன் பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளுக்கு மத்தியில், முதல்வர் என்.பிரேன் சிங் தலைமையிலான அரசு, வடகிழக்கு மாநிலம் முழுவதும் இணையத் தடையை நீட்டித்துள்ளது.

டெலிகாம் சேவைகள் (பொது அவசரநிலை அல்லது பொது பாதுகாப்பு) விதிகள், 2017-ன் விதி 2 இன் கீழ் இந்த உத்தரவு அக்.11-ம் தேதி இரவு 07:45 மணி வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில், மணிப்பூரில் செல்போன் இணையம் டேட்டா சேவைகள் இன்னும் 5 நாட்களுக்குக் கட்டுப்படுத்தப்படும் என்று மணிப்பூர் அரசு கூறியுள்ளது.

மணிப்பூர் அரசின் அறிவிப்பு
மணிப்பூர் அரசின் அறிவிப்பு

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இழிவான படங்கள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வீடியோ செய்திகளை வெளியிடக்கூடும்.

சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க செய்திகளின் விளைவாக, மாநிலத்தில் உள்ள பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு உயிர் இழப்பு மற்றும் சேதம் ஏற்படுவதற்கான உடனடி ஆபத்து உள்ளது. எனவே செல்போன் இணைய சேவைகள், எஸ்எம்எஸ் சேவைகள் மற்றும் டாங்கிள் சேவைகள் மாநிலம் முழுவதும் அக்.11-ம் தேதி இரவு 7.45 மணி வரை முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

மேலும், தேசவிரோத மற்றும் சமூக விரோதிகளின் செயல்பாடுகளை முறியடிக்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மணிப்பூர் முழுவதும் இணையதளத்தை தடை செய்யும் முடிவு அரசால் எடுக்கப்பட்டது என்றும், மாநிலத்தில் வெளியிடப்படும் எந்தவொரு தவறான தகவல்களுக்கும் கவனம் செலுத்த வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மணிப்பூர் அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in