இன்று 77வது காலாட்படை தினம்... உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

77வது காலாட்படை தினம் அனுசரிப்பு
77வது காலாட்படை தினம் அனுசரிப்பு

77வது காலாட்படை தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதி ஜெனரல் அணில் சவுகான் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய பாதுகாப்பு படையின், பிரதான கிளையான காலாட்படையில் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில் காலாட்படை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காஷ்மீரை பாதுகாக்க இந்திய ராணுவம் பட்காம் பகுதியில் தரையிறங்கியதை குறிக்கும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

77வது காலாட்படை தினம் அனுசரிப்பு
77வது காலாட்படை தினம் அனுசரிப்பு

இதன் ஒரு பகுதியாக முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத்சிங் ராணுவத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதேபோல் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, காலாட்படை தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

77வது காலாட்படை தினம் அனுசரிப்பு
77வது காலாட்படை தினம் அனுசரிப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in