அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமிரா: கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம்!

அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமிரா: கருத்து தெரிவித்த  உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில், கரப்பான் பூச்சி, பல்லி, எலி போன்றவை இருக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் இது தொடர்பான இடங்களில் ஆய்வு செய்து அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் சுத்தம் மற்றும் தரமான முறையில் உணவகங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்த வேண்டும் எனச் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘2019ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழகத்தில் நடத்திய ஆய்வில் 12 சதவீதத்திற்கும் மேலான உணவகங்கள் போதுமான தரத்துடன் செயல்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து உணவக சமையல் அறைகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்றம், சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பலதரப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்தனை உணவகங்களுக்கும் சிசிடிவி கேமிரா பொருத்தச் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்து மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in