லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ ரெய்டு!

லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ ரெய்டு!
லாலு பிரசாத் யாதவ்

ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கி இருந்தது. இந்நிலையில் ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் மிசா பாரதி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 17 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, பாட்னா, கோபால்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பிஹார் தலைநகர் பாட்னாவில் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரயில்வேயில் வேலை கொடுப்பதற்கு பிரதிபலனாக லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களால் குறைந்த விலையில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சிபிஐ வசம் சிக்கிய நிலையில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in