உள்ளாடைக்குள் கத்தை, கத்தையாக அமெரிக்க டாலர்கள்: விமான நிலையத்தில் சிக்கிய இருவர் யார்?

உள்ளாடைக்குள் கத்தை, கத்தையாக அமெரிக்க டாலர்கள்: விமான நிலையத்தில் சிக்கிய இருவர் யார்?

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு பயணிகள் விமானம் இன்று புறப்பட தயாரானது. இப்போது விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சந்தேகமடைந்த இரண்டு பயணிகள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா்.

அப்போது உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் கரன்சிகளை அவர்கள் மறைத்து வைத்திருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனா். ரூ. 20 லட்சத்தி 89 ஆயிரம் மதிப்புள்ள கரன்சியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து கரன்சிகளை கடத்திச் செல்லும் கும்பலைச் சேர்ந்தவர்களா என தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in