'ஸார், என்னை 5 பேர் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்': போலீஸாருக்கு வந்த அதிர்ச்சி போன்

சிறுவனுக்கு பாலியல் கொடுமை
சிறுவனுக்கு பாலியல் கொடுமை'ஸார், என்னை 5 பேர் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்': போலீஸாருக்கு வந்த அதிர்ச்சி போன்

டெல்லியில் 16வயது சிறுவனை சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 5 சிறுவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களைக் கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.

டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்த 16வயது சிறுவன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தன் வீட்டைச் சுற்றியுள்ள 5 சிறுவர்கள் பல ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கதறி அழுதுள்ளார். இதையடுத்து டெல்லி வடக்கு காவல்துறை அதிகாரி சாகர் சிங் கல்சி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுவனின் தாய், எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார். சிறுவனின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 5 சிறுவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த அந்த 5 சிறுவர்களும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in