ஜி.பி.முத்துவுடன் பைக்கில் அதிவேகப் பயணம்: சிக்கிய கோவை யூடியூப்பர் டி.டி.எப்.வாசன்!

ஜி.பி.முத்துவுடன் பைக்கில் அதிவேகப் பயணம்: சிக்கிய கோவை யூடியூப்பர் டி.டி.எப்.வாசன்!

பிரபல யூடியூப்பர் டி.டி.எப் வாசன் மீது கோவை மாநகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மற்றொரு யூடியூப்பரான ஜி.பி முத்துவோடு அதிவேகமாக டூவீலரில் சென்றதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 14-ம் தேதி, யூடியூப்பரான டி.டி.எப் வாசன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் யூடியூப்பர் ஜி.பி.முத்து என்பவரை பின்சீட்டில் அமரவைத்து கோவை மாநகரம், டி 3 போத்தனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்.டி.எஸ் பேக்கரி அருகே அதிவேகமாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.

கூடவே அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் வாகனத்தை ஒட்டி அதை பதிவு செய்து அவரது யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் டி.டி.எப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பின்னால் இருந்து பயணித்ததால் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in