மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சிறப்பு முகாம் மூலம் மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில், மின் மானியம் பெறுபவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், "ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது. ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது ஒருவருக்கு பாதுகாப்பு தான் என்றும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் எந்த முறைகேடுகளும் நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in