துபாயிலிருந்து வேதாளைக்கு கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கக்கட்டிகள்: சிக்கியவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கக்கட்டிகள்
கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கக்கட்டிகள் துபாயிலிருந்து வேதாளைக்கு கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கக்கட்டிகள்: சிக்கியவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

துபாயில் இருந்து இலங்கையைச் சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு, அனுப்பிய தங்கக்கட்டிகள் மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த ஒருவருக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக
தமிழகத்திற்கு தங்கக்கட்டிகள்  கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிப்ரவரி 8-ம் தேதி இரவு தகவல் கிடைத்தது. இதன்படி, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்,  இந்திய கடலோர காவல்படையினர், மன்னார் வளைகுடா  கடற்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது  மண்டபம் தென்  கடற்பகுதிக்கு வந்த பைபர் படகை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது படகில் இருந்து ஒரு மூடை கடலில் எறியப்பட்டது.

இதையடுத்து, அப்படகை சுற்றி வளைத்து அதிலிருந்த 3 பேரிடம் விசாரித்தனர். துபாயில் இருந்து இலங்கையைச் சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு, அனுப்பிய தங்கக்கட்டிகளை மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த ஒருவருக்கு கடத்தி வந்ததும், ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூடையை கடலில் தூக்கி வீசியதாகவும் கூறினர்.

இதையடுத்து கடலில் வீசிய மூடையை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தேடினர். இந்தநிலையில், கடலுக்கு அடியில்  நேற்று மதியம் கண்டெடுத்த முடையை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதில் 17.74 கிலோ தங்கக்கட்டி, நகைகள்  இருந்தன. இதன் மதிப்பு ரூ.10.50 கோடி என கூறப்படுகிறது. இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த முஹமது சமீர், மண்டபம் நாகூர் கனி, சகுபர் சாதிக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்,   தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து  விசாரித்து வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in