ஸ்வைப்பிங் மிஷின் வேலை செய்யாது: பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்துக் கொலை

தாக்குதல் நடந்த பெட்ரோல் பங்க்
தாக்குதல் நடந்த பெட்ரோல் பங்க்ஸ்வைப்பிங் மிஷின் வேலை செய்யாது: பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்துக் கொலை

ஹைதராபாத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் காரில் வந்தவர்களால் அடித்துக் கொலை செய்யப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நரசிங்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு காரில் பெட்ரோல் போட மூன்று பேர் வந்தனர். அப்போது சஞ்சய் என்ற தொழிலாளி அவர்களது வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். அப்போது காரில் இருந்தவர்கள்,பணத்திற்குப் பதிலாக கார்டு ஸ்வைப்பிங் செய்ய வேண்டும் என ஏடிஎம் கார்டைத் தந்தனர். ஆனால், கார்டு ஸ்வைப்பிங் இயந்திரம் வேலை செய்யாது என்பதால் ரூபாயாகத் தாருங்கள் என்று பெட்ரோல் பல்க் ஊழியர் சஞ்சய் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்தவர்கள், சஞ்சயை சரமாரியாக தாக்கினர். அப்போது பெட்ரோல் பல்கில் இருந்த மற்றொரு ஊழியரான சோட்டு அவர்களைத் தடுத்தார். ஆனால், அதனையும் மீறி அவர்கள் சஞ்சயைத் தாக்கினர். இதனால் மயங்கி விழுந்த சஞ்சய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து நரசிங்கி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சஞ்சயை அடித்துக் கொன்றவர்கள் ஜொன்னடா கிராமத்தைச் சேர்ந்த நரேஷ், மல்லேஷ், அபிஷேக் எனத் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in