சுசீந்திரம் மார்கழித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சுசீந்திரம் மார்கழித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்கோடு கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒரு சேர காட்சியளிக்கின்றனர். இந்திரன் புனிதம் அடைந்த ஸ்தலம் இது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாள்கள் மார்கழித் திருவிழா மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படும்.

நிகழாண்டிற்கான மார்கழித் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்குமண் மடம் ஸ்தானிகர் கொடி ஏற்றினார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்புப் பூஜைகள் செய்தார். விழா நாள்களில் தினமும் மாலையில் சமயச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கருத்தரங்கங்கள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இவ்விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் 9-ம் திருவிழாவான இன்று காலையில் நடந்தது. பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

சுவாமிதேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் இதில் பவனிவந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ஓம் நமச்சிவாய என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in