பதைபதைக்கும் வீடியோ... குளத்திற்குள் பாய்ந்த கார்... தந்தையும், மகளும் உயிர் பிழைத்த அதிசயம்!

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த கார்
நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த கார்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள நீர்வீழ்ச்சியின் குளத்தில் கார் கவிழ்ந்ததில் தந்தை மற்றும் 13 வயது மகள் இருவரும் நீரில் மூழ்கினர். ஆனால் இவர்கள் உடனடியாக பத்திரமாக காப்பாற்றப்பட்டனர். இந்தூர் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிம்ரோல் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு சிவப்பு கார் பாறை மேற்பரப்பு விளிம்பில் சறுக்கி குளத்தில் விழுந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. கார் குளத்தில் மூழ்கிய உடனேயே,அருகில் நின்ற நபர் குளத்தில் குதித்து வாகனத்தை நோக்கி நீந்தினார், அதில் இருந்து ஒரு இளம் பெண் உதவிக்காக கத்தினார்.

“திடீரென கார் கவிழ்ந்து அவர்கள் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். நான் குதித்து காருக்குள் இருந்த நபரைக் காப்பாற்றினேன். அவரது மகள் அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார். சம்பவத்தைப் பார்த்து சிறிது நேரம் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் பின்னர் தைரியத்தை வரவழைத்து உள்ளே குதித்தேன். தந்தையும், மகளும் காப்பாற்றப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சுனில் மேத்யூ தெரிவித்தார்.

இதற்கிடையில், டிரைவரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் மேத்தா தெரிவித்தார். “கார் அலட்சியமாக நீர்வீழ்ச்சியின் குளத்திற்கு மிக அருகில் நிறுத்தப்பட்டது. கார் டிரங்க் வேகமாக மூடப்பட்ட போது உருள ஆரம்பித்து, பின்னர் நீர்வீழ்ச்சியின் குளத்தில் விழுந்ததை நாங்கள் அறிந்தோம்” என்று எஸ்பி கூறினார். விபத்து நடைப்பெற்றது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இதனால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in