சென்னை மெரினாவில் விபத்தில் சிக்கிய கார்: உயிர் தப்பிய ராதாகிருஷ்ணன்

சென்னை மெரினாவில் விபத்தில் சிக்கிய கார்: உயிர் தப்பிய ராதாகிருஷ்ணன்

சென்னை மெரினாவில் கூட்டுறவு துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக ராதாகிருஷ்ணனும், கார் ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினர்.

தமிழகம் முழுவதும் இன்று சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டினம்பக்கத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூட்டுறவு துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை காரில் வந்து கொண்டிருந்தார். சென்னை மெரினா சாலையில் ராதாகிருஷ்ணனின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற வாகனம் இவரது கார் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுரும், ராதாகிருஷ்ணனும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையின் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாற்றுக் காரில் நினைவு நாள் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனது அலுவலகத்திற்கு சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in