குரூப் 2 எழுதப் போறீங்களா?: ஹால் டிக்கெட் ரெடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 எழுதப் போறீங்களா?: ஹால் டிக்கெட் ரெடி

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகள்  எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று  வெளியிட்டுள்ளது. 

குரூப் 2, 2ஏ தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான  www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் தேர்வாணையத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in